61 வது குடியரசு தின விழா, நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர்
திரு. கு. பரசுராமன் B.Sc. அவர்கள் தலைமையேற்று தேசியக்கொடியை ஏற்றிவைக்க சிறப்பாக நடை பெற்றது. லயன்ஸ் க்ளப் நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். உதவி ஆசிரியர்
திரு பு. ஜெய பிரபு அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்
திரு. சு. ஆனந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்கள். அனைத்து ஆசிரியர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவில் நல்ல இதயம் கொண்ட இருவர் , தலா ரூ. 1000 பள்ளிக்கு நன்கொடையாக அளித்து , புரவலர்களாக இணைத்துக் கொண்டார்கள். தலைமை ஆசிரியை
திருமதி. கோ. தேனருவி அவர்கள் இறுதியில் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment