Wednesday, December 23, 2009

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் வருகை














எம் பள்ளிக்கு 21/12/09 அன்று , மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. சந்தான தஞ்சை வாணன் அவர்கள் முன்னறிவிப்பின்றி வருகை தந்தார். பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களின் தரம், கழிவறை வசதி, சத்துணவுக் கூடம் மற்றும் பதிவேடுகள் ஆகிய அனைத்தையும் பார்வையிட்டார்.
மாணவர்களையும் கேள்விகள் கேட்டு ஆய்வு செய்தார்.

கேசவன் என்ற எட்டாம் வகுப்பு மாணவனை கணினியை இயக்கச் சொல்லி பார்வையிட்டார்.

எழிழரசன் என்ற ஏழாம் வகுப்பு மாணவனை ஆங்கிலப் பாடம் நடத்தச் சொன்னார்.
ABL வகுப்பறைகளை பார்வையிட்டார்.

தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா இரண்டு கட்டுரைகள் வழங்குமாறு அறிவுறுத்தினார்.
பள்ளியின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாகவும் மேலும் நன்கு செயல்படுமாறும் அனைத்து ஆசிரியர்களையும்,மாணவர்களையும் ஊக்குவித்து சென்றார்.
முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களை, தலைமை ஆசிரியை திருமதி. கோ .தேனருவி அவர்கள் வரவேற்றார்.

உதவி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.














No comments:

Post a Comment