Sunday, November 15, 2009

மரம் நடும் விழா, குழந்தைகள் தின விழா..


























நவம்பர் 13 ஆம் தேதி , வெள்ளிக்கிழமை அன்று குழந்தைகள் தின விழா, மரம் நடும் விழா மற்றும் தமிழக முதல்வர் அவர்களின் குழந்தைகள் கண்ணொளி திட்டத்தின் கீழ், மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கு. பரசுராமன் B.Sc. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. ஆனந்தம் அவர்கள் முன்னிலை வகித்தார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி. கோ. தேனருவி அவர்கள் வரவேற்றார்.

ஊராட்சி மன்றத் தலைவர் பள்ளி வளாகத்தில் மரக் கன்றினை நட்டார். பின்னர் பள்ளி மாணவர்களை வாழ்த்தி இனிப்புகளை வழங்கினார். மருத்துவர்களால் பரிந்துரைக்கப் பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கினார்.
பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடை பெற்றது.

உதவி ஆசிரியை திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.



























No comments:

Post a Comment