நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் திரு. கு. பரசுராமன் அவர்களின் சீரிய முயற்சியால் எம் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது . கலைஞர் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஏராளமான பொதுமக்களும், கல்வி புரவலர்களும் எண்ணிலடங்கா வகையில் இப் பள்ளியின் வளர்ச்சியில் நாள் தோறும் பங்கு பெற்று வருகின்றனர். தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது.
எம் பள்ளி தஞ்சை புதியபேரூந்து நிலையத்துக்கும் , தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் இடையில் அமைந்துள்ளது. முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இயங்கும் எம் பள்ளியில் சுமார் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
சத்துணவு திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் எம் பள்ளியில் சிறப்பாக செயல் படுத்தப் பட்டு வருகிறது.
திரு. ஆனந்தம் அவர்களின் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகமும் செம்மையாக செயல்பட்டு வருகிறது.
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல் வழிக் கற்றல் மூலமும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி மூலமும் கல்வி மிகச் சிறப்பாக கற்பிக்கப் பட்டு வருகிறது.
No comments:
Post a Comment